*** BREAKING NEWS ***EID MUBARAK TO ALL MUSILM *** INSHAALLAH WEB SITE RESTART NOW***and all so we start own website lalpet.co.in plz all brothers visit

Sunday 12 July 2009

சமாதி வழிபாடு

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை. அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது. தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.
ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.
ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ''வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும். அல்குர்ஆன் 10:18.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை"" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3
குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104
நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

அதே இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி கொடுங்கள்-திருமா

சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னதாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக மதவெறி கும்பல் ஒன்று பாபர் மசூதியை இடித்தது. அது குறித்து விசாரணை நடந்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.பொதுவாக எந்தவொரு விசாரணை அறிக்கையும் 6 மாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், லிபரான் தனது அறிக்கையை அரசு அளிக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலரின் உள்நோக்கம் காரணமாக இந்த கமிஷன் சுமார் 48 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மக்களு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அந்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.இந்த பிரச்சனையின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்.
நன்றி:தட்ஸ்தமிழ்

Thursday 9 July 2009

சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்.

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள்.அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது.இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர்.அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் :முஸ்லிம்) நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்:அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.அல்லாஹ் கூறுகின்றான்:எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர்.(அல்குர் ஆன் : அல்மாயிதா 5:56)

Wednesday 8 July 2009

பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்!







இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை.தெரிவிக்கவும் முயலுவதில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள்(உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை,அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள்(ஈரானிய திரைப்படங்கள்)எடுக்கப்பட்டுள்ளன.எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.
அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம்.படத்தின் கதை இதுதான்.நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.
மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).
ஏற்க்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும்.பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது

டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் ஆங்கில‌ உரைக‌ளை த‌மிழில்

பிர‌ப‌ல‌ இஸ்லாமிய‌ சொற்பொழிவாள‌ர் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் ஆங்கில‌ உரைக‌ளை த‌மிழில் விசிடியாக‌ கொண்டு வ‌ரும் ப‌ணியினை காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் ) எனும் அமைப்பு மேற்கொண்டு வ‌ருகிற‌து. இத்த‌க‌வ‌லை வ‌ளைகுடாவில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டு வ‌ரும் முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்இதுவ‌ரை தீவிர‌வாத‌ம் முஸ்லிம்க‌ளின் த‌னி உடைமையா ? ம‌ற்றும் இந்து ச‌ம‌ய‌ப் பிர‌முக‌ர் ர‌விச‌ங்க‌ருட‌ன் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க் நிக‌ழ்த்திய‌ உரை ஆகிய‌ இரண்டு நிக‌ழ்வுக‌ள் த‌மிழில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஒரு விசிடியினை த‌மிழாக்க‌ம் செய்திட‌ சுமார் இர‌ண்டு இல‌ட்ச‌ம் ரூபாய் செல‌வு ஆவ‌தாக‌ முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார். இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் அமைப்பின் த‌லைவ‌ராக‌ அபுல் ஹ‌ச‌ன் க‌லாமி ஹாஜியாரும், செய‌லாள‌ராக‌ ந‌வாஸ் உள்ளிட்ட‌ 12 பேர் கொண்ட‌ க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர்.இத‌ன் சார்பில் ஆயிஷா சித்திக்கா பெண்க‌ள் அர‌பிக்க‌ல்லூரி ம‌ற்றும் பைத்துல்மால் உள்ளிட்ட‌வை ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.விசிடி த‌யாரிப்பில் உத‌விட‌ விரும்புவோர் அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌ஜ‌லாலுதீன் 050 614 2633இந்தியாவில் ......
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )141 கே.டி.எம். தெருகாய‌ல்ப‌ட்ட‌ண‌ம் 628 204தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம்94 871 24246

Thursday 2 July 2009

ஈரானை அச்சுறுத்த பொய் சொன்ன சதாம்-எப்.பி.ஐ

வாஷிங்டன்: ஈரானால் ஈராக்குக்கு ஆபத்து ஏற்படும் என பயந்த சதாம் உசேன், தன்னிடம் அபாயகரமான நாசகார ஆயுதங்கள் இருப்பதாக காட்டிக் கொண்டார். உண்மையில் ஈராக்கிடம் அப்படி எதுவும் இல்லை என்பதே உண்மை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இது தெரிய வந்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் சதாம் உசேனிடம் நடந்த விசாரணையின்போது இந்தத் தகவல்களை சதாம் தெரிவித்தாராம்.இந்தத் தகவல்கள் இதுவரை ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவற்றை எப்பிஐ வெளியிட்டுள்ளது.எதிரிகளின் கண்ணில் ஈராக் பலவீனமான நாடாக பார்க்கப்படக் கூடாது என்று விரும்பினார் சதாம். குறிப்பாக ஈரான் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என விரும்பினார்.இதனால்தான் ஈராக்கிடம் நாசகார ஆயுதங்கள் இருப்பது போல அவர் காட்டிக் கொண்டார். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை என்று சதாம் தெரிவித்தார்.ஈராக்கின் பலவீனங்களை ஈரான் கண்டுபிடித்து வருவதாக உணர்ந்த சதாம், அதிலிருந்து ஈராக்கைக் காத்துக் கொள்ள பெருமளவில் ஆயுதங்கள் இருப்பது போல காட்டிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தாராம் சதாம்.அமெரிக்காவை விட ஈரான்தான் தனது முதன்மையான எதிரி என்று சதாம் நினைத்தார். ஆயுதங்கள் இருக்கிறதா என்பதைப் பார்வையிட ஐ.நா. குழுக்கள் வருகை தர முயன்றபோதெல்லாம் அவர் தடுத்ததற்கும் இதுவே காரணம். எங்கே குட்டு உடைந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் எந்தக் குழுவையும் ஈராக்குக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.ஈரானுக்கும், ஈராக்குக்கும் 1980ம் ஆண்டு போர் வெடித்தது. 1988ம் ஆண்டு வரை அது நீடித்தது. அந்த சமயத்தில் ஈராக் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.2003ம் ஆண்டு ஈராக் மீது ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். மக்களைக் கொல்லும் நாசகார ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறித்தான் இந்த போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு ஆயுதம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சதாம் உசேன் பிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்தபோது அவரிடம் 20 முறை எப்பிஐ ஏஜென்டுகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஐந்து முறை சாதாரண முறையில் அவரிடம் பேசியுள்ளனர்.சதாமை விலை மதிக்கத்தக்க கைதி நம்பர் 1 என்று பெயரிட்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். பின்லேடனுடன் தொடர்பில்லை..இந்த விசாரணையின்போது இன்னொரு முக்கிய மான விஷயமும் அமெரிக்கர்களுக்குத் தெரிய வந்ததாம். அல் கொய்தா தலைவர் பின்லேடனுக்கும், தனக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று சதாம் உசேன் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.மேலும், வட கொரியாதான் தனது மிக நெருங்கிய தோழன் என்றும் சதாம் கூறியுள்ளார்.1991 பெர்சிய வளைகுடாப் போரின்போது, இஸ்ரேலிய நிலைகளை நோக்கி ஸ்கட் ஏவுகணைகளை வீசுமாறு தான்தான் உத்தரவிட்டதாகவும் சதாம் தெரிவித்தாராம். அரபு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்ரேல்தான் என்று தான் நினைத்ததால் இவ்வாறு உத்தரவிட்டதாக சதாம் கூறினாராம்.மேலும் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சதாம் தொலைபேசியை பயன்படுத்தியதே இல்லையாம். ஆட்கள் மூலம்தான் தகவல்களை சொல்லி அனுப்புவாராம், பெறுவாராம்.2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
நன்றி :தட்ஸ்தமிழ்

நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...??!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ - உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் -(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.

Wednesday 1 July 2009

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.
···
ஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.
அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.
முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.
உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.
திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.
சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.
எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?
···
புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’ தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.
பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.
உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.
இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.
இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.
···
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.
சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.
வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.
உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும், இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.
···
விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.
இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.
தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?
ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.
ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.
மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?
ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?
இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை, விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !

இந்துக் கலாச்சாரம் – பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்!
அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.
[youtube=http://www.youtube.com/watch?v=lEbD2aXs-XU&eurl=http://www.desihotmasala.com/2009/01/mangalore-pub-mangalore-pub-girls.html&feature=player_embedded]
இந்திய கலாச்சாரத்தையும், ‘இந்து’ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். “இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?
கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் எனக் காட்டுக் கூச்சல் போடும் சங்கப் பரிவாரங்களின் ‘நல்லொழுக்க’ நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் கூவம் கூடக் காத தூரம் ஓடிவிடும்.
இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி, பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர். காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக்கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க.வின் எம்.பி. கிலோகணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டு@பான பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் “இந்தியாடுடே” ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை. காமக்களியாட்டம் நடத்தும் கொலைகார ஜெயேந்திரன்தான் இவர்களின் லோககுரு. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த ‘நல்லொழுக்க’ சீலர்கள்தான் பெண்களுக்கு ‘ஒழுக்கம்’ பற்றி வகுப்பெடுக்கிறார்கள். சாராய விடுதிக்குப் போய் இந்துப் பெண்களின் மானம் காக்க முயன்றவர்கள், அனுராதா ரமணன் முதல் ஸ்ரீரங்கம் உஷா வரை காமகோடி சங்கராச்சாரியின் மன்மதபாணத்துக்கு இரையானபோது, அவற்றைக் ‘கிருஷ்ணலீலை’ எனக் கருதிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களா என்ன?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘தேசிய நாயகன்’ ஸ்ரீராமனைக் கைவிட்டு, ‘ஆக்ஷன் நாயகி’ விஜயசாந்தியையும், ‘கனவுக் கன்னி’ சௌந்தர்யாவையும், முன்னாள் ‘கவர்ச்சிப்புயல்’ ஹேமாமாலினியையும் நம்பிப் பிரச்சாரம் செய்து ‘இந்து’க் கலாச்சாரப் பெருமையைப் பா.ஜ.க. நிலைநாட்டியது. பெண்கள் குடிப்பதற்கு எதிராக இப்போது கொம்பு சுழற்றுபவர்கள், சென்ற ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலில், எல்லோருக்கும் பட்டை சாராயம் வழங்கியதை எந்தக் கலாச்சாரத்தில் சேர்ப்பது? இவர்கள் கொடுத்த கள்ளச்சாராயத்தைக் குடித்துச் செத்துப்போன 400பேர்களில் பெண்களும் இருந்தார்களே!
இவர்களுக்குக் குடிப்பதுதான் பிரச்சினை என்றால் கருநாடகத்தில் இருக்கும் எல்லா சாராயக் கடைகளையும் மூடக்கோரி போராடலாம். ஆனால், சாராய முதலாளி மல்லையாவிடம் அடுத்த தேர்தலுக்குக் கைநீட்ட முடியாதே! நட்சத்திர விடுதி “பார்”களில், எப்படிச் சாராயம் ஊற்றித் தருவது எனப் பெண்களுக்குப் பட்டயப் படிப்பாகச் சொல்லித் தருவதையாவது எதிர்க்கலாம் என்றால், அந்த நட்சத்திர விடுதிகளில் பாதி இவர்களது கட்சிக்காரர்களுடையதாயிற்றே! சரி, பெண்களைக் குடிக்கத் தூண்டிய கேளிக்கை விடுதியையாவது தாக்கினார்களா என்றால், அதுவும் இல்லை. மாறாக, அங்கே இருந்த பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருக்கின்றனர்.
கேளிக்கைவிடுதியில் வீரம் காட்டிவிட்டு அடுத்ததாகக் காதலர் தினத்தன்று, வெளியே சுற்றும் காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர், இப்பார்ப்பன பாசிஸ்டுகள். சங்கிலியோடு தெருநாய்களைப் பிடிக்க வருபவர்களைப்போல, சில இடங்களில் கையில் மஞ்சள் கயிற்றுடன் இவர்கள் திரிந்தனர். ஆனால், இந்த வேலையை இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் உமாபாரதி பா.ஜ.க.வை விட்டு போயிருக்கவே மாட்டார். அவர் விரட்டி விரட்டிக் காதலித்த கோவிந்தாச்சார்யாவையே உமாபாரதிக்கு கட்டி வைத்திருந்திருந்தால், கட்சிப் பிளவையாவது தடுத்திருந்திருக்கலாம்.
எல்லா மனித உணர்வுகளையும் விற்பனைச் சரக்காக்கி வணிகமயமாக்கும் முதலாளித்துவம்தான், காதலர்களின் உணர்வுகளை சந்தைப்படுத்திக் காதலர் தினத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறது. வணிக நோக்கம் கொண்ட காதலர் தினத்தைப் பரப்பும் வணிக நிறுவனங்கள்ஊடகங்களைத் தட்டிக் கேட்காமல், இந்த நுகர்வு கலாச்சாரத்தின் பலிகடாக்களான பெண்களைக் கோழைத்தனமாகத் தாக்குகிறது, ராம்சேனா.
மேற்கத்திய கழிசடை கலாச்சாரத்தைப் பயங்கரமாக எதிர்ப்பது போல பம்மாத்துக் காட்டும் இவர்கள், அதனை உருவாக்கும் தாராளமயப் பொருளாதாரத்தை, தலையில் வைத்து தாங்குகிறார்கள். அந்நிய மூலதனம் வேண்டும்; அடிமைச் சேவகம் வேண்டும்; ஆனால் அது பரப்பும் கலாச்சாரம் மட்டும் வேண்டாம் என்றால் எப்படி? பேய்க்கு வாக்கப்பட்டுவிட்டுப் பிணம் மட்டும் திண்ண மாட்டேனென்றால் எப்படி?
கேளிக்கை விடுதி மீது இக்கும்பலின் தாக்குதல் மற்றும் காதலர் தினத்துக்கு மிரட்டல் விடப்பட்டது போன்றவை இந்தியா முழுதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. உடனடியாக “ராம் சேனாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பா.ஜ.க. பசப்பியது. எதைச் செய்தாவது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த, பல்வேறு பினாமி அமைப்புகளின் பெயரில் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கமான தந்திரமாகும். மற்ற மாநிலங்களில் இந்து முன்னணி, விவேகானந்த கேந்திரா மற்றும் அபினவ் பாரத் போன்ற பினாமி அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுவதைப் போல, கர்நாடகத்திற்காக இவர்கள் உருவாக்கி இருப்பதுதான் ராம்சேனா. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் முழு நேர ஊழியரான முத்தலிக் மீதிருந்த 50க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகளை, முதல்வராகப் பதவியேற்றவுடன் எடியூரப்பா திரும்பபெற்றதில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.
உலகமய பண்பாட்டின் விளைவாக இந்தியாவெங்கும் “பப்”கள் கொடி கட்டி பறக்கும் போது, கர்நாடகத்திலிருக்கும் “பப்”பில் மட்டும் காவிக் கும்பல் புகுந்து தாக்க வேண்டிய அவசியமென்ன? இம்மாநிலத்தில்தான் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவும், உலகமய கலாச்சார சீர்கேடுகள் உச்சத்தில் இருக்கும் மங்களூர் போன்ற நகரங்களும் உள்ளன. இந்த கலாச்சார மாற்றங்களை நடுத்தர வர்க்கத்தால் சீரணித்துக் கொள்ள முடிவதில்லை. இந்த வர்க்கத்தின் கலாச்சார தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே இந்துத்துவ பயங்கரவாதிகளின் நோக்கம்.
பார்ப்பன பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதையே தேசிய பெருமிதமாக முன்னிறுத்தி குஜாராத்தில் வெற்றி பெற்றார்கள். ஒரிசாவில் கிறித்துவ தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் காலூன்றினார்கள். ஏற்கெனவே கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒகேனக்கல் பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்கள். தற்போது இனவெறியோடு “பப்” கலாச்சார எதிர்ப்பு கலந்த புதிய சோதனையை அங்கே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதேபோல தமிழகத்தில், தன்னெழுச்சியாகத் தோன்றியுள்ள ஈழ ஆதரவு உணர்ச்சியைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் புதிய சோதனையை இந்துத்துவ நரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.
ராம்சேனாவின் பாசிச நடவடிக்கையை எதிர்க்க கிளம்பிய மேட்டுக்குடி கும்பலொன்று இன்னொரு ஆபாசக் கூத்தை அரங்கேற்றியது. காதலர் தினத்தன்று பெண்கள் அணியும் உள்ளாடையை முத்தலிக்குக்கு அனுப்பும் போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். உழைக்கும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் மத்தியில், குடிப்பதற்கும் கூத்தாடுவதற்குமான உரிமையையே பெண் விடுதலையின் உச்சம் என்று இவர்கள் பேசுவது மிகவும் ஆபத்தானது. ராம்சேனாவின் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதாக கிளம்பியுள்ள இவர்கள், அதற்குப் பதில் ஏகாதிபத்தியத்தின் மேட்டுக்குடிப் பெண்ணடிமைத்தனத்தைப் புகட்டுகிறார்கள்.
இன்று இந்து பயங்கரவாதிகள் மதுவிடுதிகளிலும் காதலர் தினத்திலும் நடத்தியிருக்கும் வன்முறையானது, தங்களது கூத்தடிக்கும் உரிமையைப் பறிக்கிறதென்று எதிர்போராட்டம் நடத்தும் இந்த மேட்டுக்குடி தாராளமயதாசர்கள், இதே கர்நாடகாவில் முஸ்லீம், கிறித்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தி அம்மக்களின் கருத்துரிமையை மட்டுமல்ல, வாழும் உரிமையைக் கூட இந்து பயங்கரவாதிகள் பறித்த போது ஒன்றுமே நடக்காதது போல மவுனமாக இருந்தனர். இன்றைக்கு தமது நுகர்வு வெறிக்கு குறுக்கே இந்துத்துவ பயங்கரவாதிகள் வருவதால் மட்டுமே தங்கள் சுதந்திரம் பறி போய் விட்டதாக ஒப்பாரி வைக்கின்றனர். இதையே ஏதோ கருத்துரிமைக்கான போராட்டம் போலவும், பெண் உரிமைக்கான புரட்சி போலவும் பிரமிப்பூட்டுகின்றனர். கர்நாடகத்தில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்; ஓவியர்கள் மீதான தாக்குதல் முதலான இந்துவெறி பயங்கரவாத வெறியாட்டத்தை, கணநேரச் செய்தியாக வெளியிட்டுவிட்டு ஓய்ந்து போன ஊடகங்கள், இந்த அப்பட்டமான சுயநலம் கலந்த அற்பத்தனத்தையே முற்போக்கு “ஜாக்கி” கொண்டு தூக்கி நிறுத்துகின்றன.
இந்து பயங்கரவாதக் கும்பல், தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் ஆதரித்துக் கொண்டே அவை உருவாக்கும் கலாச்சாரச் சீர்கேட்டை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளுகிறது. மாறாக, தாராளவாதக் கும்பலோ அந்த சீர்கேட்டையே பெண்ணுரிமையாக முன்னிறுத்துகிறது. முஸ்லீம்கள், கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள்; ஓவியர்கள் மீதான தாக்குதல்கள், கலாச்சார சீர்க்கேட்டை எதிர்த்து தாக்குதல், கன்னட இனவெறி – என இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய பார்ப்பன பயங்கரவாதத்தின் வேறுபட்ட வடிவங்கள் என்பதை உணர்ந்து புரட்சிகரஜனநாயக சக்திகள் அணிதிரண்டு முறியடிக்க வேண்டிய தருணமிது. ஆனால், தாராளமய தாசர்களோ நாட்டைக் கவ்வியுள்ள இப்பேரபாயத்தை உணர மறுத்து, கோமாளித்தனமான எதிர்ப்பு போராட்டங்களால் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றனர்

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் சீரழியும் என அரற்றினார்கள். அதையே தினமணி தலையங்கம் எழுதி வழிமொழிந்தது.
உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பார்ப்பன மேல்சாதியினரிடத்தில் இருந்தபோது எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இதெல்லாம் பழங்கதையென்றால் இப்போதைய நிலவரம் என்ன?
சங்கரமடத்தில் கொலை முதல் காமக்களியாட்டம் வரை எல்லாம் நடந்திருக்கின்றன. திருவாடுதுறை ஆதீனத்தில் இளையவர் பெரியவரைத் தீர்த்துக்கட்ட போட்ட திட்டம், தில்லைக் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் முப்பதாயிரம் ரூபாய் எனக் கணக்கு காட்டும் தீட்சிதர்களின் கொள்ளை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) இருக்கும் பரகால ஜீயர் மடம். இந்த மடத்தில் நடக்கும் கூத்துக்கள் பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் 29.01.09 இதழில் அதன் நிருபர் ஷானு விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.
திருவரங்கத்தில் இது போன்று பல ஜீயர் மடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு ஏராளமான சொத்துக்களும், அந்த சொத்துக்களை மடத்தின் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் பினாமிகள் மூலம் தனியார் வசம் விற்பதும், அதில் ஏராளமான ஊழலும், இதற்கு உதவ மறுக்கும் சாமியார்களை ஊழல் செய்யும் சாமியார்கள் வெளியே தெரியாமல் கொலை செய்வதும் இங்கே சகஜம். வைணவத் தலமான திருவரங்கம் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதும் அவர்கள் இந்த மடங்களுக்கு தான தர்மம் செய்வதும், அது பின்னர் ஸ்வாகா செய்யப்படுவதும் இங்கு வாடிக்கைதான்.
பெருமாளைப் பாடும் பாகவதர்கள் வந்தால் தங்குவதற்காக அந்தக்கால பணக்காரர்கள் சிலர் கட்டிய மடம்தான் இந்த பரகால ஜீயர் மடம். மடத்திற்கு திருச்சியைச் சுற்றி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும், மடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்வதும் நடைமுறையாம். இம்மடத்தின் சொத்து மதிப்பு அறுபது கோடிக்கு அதிகமாம்.
ஒரிசாவிலிருந்து வந்த பார்ப்பனரான பத்ரி நாரயண ராமானுஜதாசன் ஆரம்பத்தில் இம்மடத்திற்கு சமையல்காரராக வந்தவர். பின்னர் மடத்தின் இன்றைய ஜீயரான லக்ஷ்மண நாராயண ஜீயரின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்கான தேவைகளைச் செய்து கொடுத்து, அவரை மடக்கி ‘பவர் ஆஃப் அட்டர்னி’ வாங்கிக் கொண்டு அடுத்த ஜீயராகப் போகின்றவர் என்ற தகுதியில் சொத்துக்களை அனுபவித்து வருகிறார். சைவ ஆதீனங்களைப் போல வைணவ ஜீயர்கள் பிரம்மச்சாரிகள் கிடையாது. எல்லா ஜீயர்களும் பேஷாக ஒன்றுக்கு இரண்டாகக்கூட திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றெடுத்து சுபமாக வாழ்க்கை நடத்தலாம். இது ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யமாட்டார்கள், புராட்டஸ்டண்டு பாதிரியார்கள் திருமணம் செய்யலாம் என்பதோடு ஒப்பிடத்தக்கது.
மற்றபடி பாதிரியார்களும், ஆதீனங்களும் தத்தமது பாலியல் தேவைகளைக் கள்ளத்தனமாக அனுபவிப்பது வேறு விசயம். ஆனால் ஜீயர்களுக்கு இப்படி வசதி இருப்பதால் மடத்திற்கு வரும் பக்தைகளைப் பணத்தால், வசதியால் மடக்கிப் பெண்டாளுவது திருவரங்கத்துக்கே தெரிந்த விசயம். அப்படித்தான் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியான செல்வி என்ற பெண் தன் தோழியுடன் இந்த மடத்திற்கு வந்தார். எப்படியோ அந்தப் பெண்ணை வசியம் செய்து கொண்ட பத்ரி அவளது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தும் வைத்திருக்கின்றார். இத்தனைக்கும் இந்த பத்ரிக்கு ஒரிசாவைச் சேர்ந்த கோதாராணி என்ற மனைவியும் உண்டு.
ஆனால் நாளொன்றுக்கு ஒரு மாது என்று அனுபவிக்கும் வசதி கொண்ட பத்ரி மனைவியை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 83 வயதான ஜீயரும், கோதாராணியும் அங்கே ஆயுள்கைதிகளைப் போல காலந்தள்ளுகிறார்கள். அறுபது கோடி சொத்து என்பதால் பத்ரிக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லா மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு.
இந்நிலையில் செல்வியின் பெற்றோர் தமது மகள் காணாமல் போனது குறித்தும், அவள் பத்ரியின் கட்டுப்பாட்டில் இருப்பதை வைத்தும் திருவரங்கம் காவல் நிலையத்தில் அழுதவாறே புகார் கொடுத்தனர். அதனால் செல்வியின் பெற்றோருடன் அந்த மடத்திற்கு சென்ற போலீசாரை பத்ரி திமிருடன் எதிர்த்தார். இது இந்துத் துறவியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்துப் பீடத்தின் மீது தாக்குதல், இந்து மதம், அதன் சம்பிரதாயங்கள் மீது தாக்குதல் எனச் சாமியாடியிருக்கின்றார். உயர்மட்ட அதிகாரிகளுக்கும் போன் போட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் புகார் செய்திருக்கின்றார்.
இதனால் பதறிய போலீசு அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி செல்வியை மீட்டு வந்தனர். செல்வியோ தான் மேஜர் என்றும், தான் பத்ரி சாமியாருடன்தான் வாழப் போவதாகவும் பேச, செல்வியின் தந்தை வயது கொண்ட பத்ரியோ, சட்டப்படி தான் செல்வியைத் திருமணம் செய்வதில் என்ன தவறு எனப் போலீசிடம் சட்டம் பேசியிருக்கின்றார். எனவே இந்தப் பிரச்சினையைப் போலீசார் திருவரங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தள்ளி விட்டனர். அதன்பிறகு அங்கு நடந்த பஞ்சாயத்தில் செல்வி கவுன்சிலிங் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பப்பட்டார்.
ஒரு செல்வி போனால் என்ன இன்னும் ஓராயிரம் செல்விகள் கிடைப்பார்கள் என்பதனாலோ என்னவோ பத்ரி அலட்டிக் கொள்ளாமல் மடத்திற்கு திரும்பினார். இவ்வளவுக்கும் இந்தத் திமிரெடுத்த ஒரியாப் பார்ப்பானுக்கு பிளட் கேன்சராம். அதனால் செல்வி கோவிலுக்குச் சென்று அங்கே படுத்துக் கிடக்கும் பெருமாளிடம் தன் வாழ்க்கையில் பாதியைப் பத்ரிக்கு கொடுக்குமாறு வேண்டிக்கொள்ள அதைப் பெருமாளும் அங்கீகரித்து விட்டதாகவும் இந்தப் பத்ரி காவல்நிலையத்தில் பேசியிருக்கிறான் என்றால் என்னத்தைச் சொல்ல?
தற்போது இந்த மடத்தின் தொண்டுக் கிழமான லக்ஷ்மண நாராயண ஜீயரைக் காணவில்லையாம். எனவே அடுத்த ஜீயர் நான்தான் என பத்ரி தன்னைத்தானே நியமித்துக் கொண்டார். உண்மையில் பெரிய ஜீயரைப் பத்ரி கொன்று விட்டதாகவும், அவரை அடுத்த ஜீயராக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு வைணவ ஐயங்கார் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். மடத்தின் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதில் இந்த ஆன்மீகவாதிகள் கொலை வரைக்கும் போவார்கள் என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இரத்தப் புற்றுநோயினால் சாகப்போகின்ற பார்ப்பன ஐயங்கார் ஜீயருக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கின்றது எனில் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஜீயர்களை நினைத்தால் திகிலாக உள்ளது. ஒரு தில்லைக் கோவிலை அரசுடைமையாக்கியதைப் போல எல்லா ஜீயர், ஆதீனங்களையும் அரசு கைப்பற்றி மடத்தலைவர்களுக்கு மடத்திலேயே ஏதாவது எடுபிடி வேலைகள் கொடுப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி!
மற்றபடி பெண்டாளும் ஒரு ஃபிராடு சாமியாரைக் கைது செய்யப் போனால் அது இந்துமதத்திற்கு ஆபத்து வருகிறது, இந்துமத சம்பிரதாயங்களின் மீதான தாக்குதல் என்றால் இதைவிட இந்து மதத்தை நாம் கேவலப்படுத்தத் தேவையில்லை. திருவரங்கத்தானைப் பார்ப்பதற்கு பாரததேசம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஜீயர்களின் உண்மைக் கதைகளை முத்து காமிக்ஸ் போல படக்கதையாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட்டால் அது நிச்சயம் இந்துமதத்திற்கு செய்யப்படும் பேருதவியாக இருக்குமே!